ஆழிப்பேரலை நினைவுகளின் 13 ஆவது நினைவு இன்று!
Tuesday, December 26th, 2017
சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு கண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் நடைபெற்றது.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் உயிர்நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி உறவுகளைப் பிரிந்து துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகளாகும் நிலையில் இலங்கையின் பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை மோசடி குறித்து GMOA வெளியிட்ட கருத்து
ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் கென்ரோரோ ஷோனுரா இலங்கைக்கு!
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்றுமுதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!
|
|
|


