ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!

Sunday, April 21st, 2019

நாட்டின் சில பகுதிகளில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்பு சம்பவங்களால் அசாதாரண சூழல் தோன்றியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் சகல வழிகளிலும் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதனை அறிவித்து கொள்கின்றேன்.

இந்த சம்பவம் தொடர்பில் வெளியாகும் வதந்திகள் பொய்யான தகவல்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும், மக்கள் அமைதி பேண வேண்டியது மிகவம் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்ககைள் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் இவ்வாறான சூழ்நிலைகளில் எடுக்கப்பட வேண்டிய சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: