ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் துணைவேந்தர்களே பொறுப்பு..!

Sunday, May 29th, 2016

பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு மற்றும் லிப்டன் சுற்றுவட்டப் பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்களாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் பல்கலைக்கழக துணைவேந்தர்களே ஏற்க வேண்டும்  என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறும் அனைத்து நடவடிக்கைகளையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவேண்டியது  பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களினதும் மாணவர்களினதும் எதிர்பார்ப்பினை நிவர்த்திசெய்வதற்கு அரசாங்கம் விரிவான கொள்கைகளை வைத்திருக்கின்றது.  ஆனால் மாணவர்கள் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு மற்றும் லிப்டன் சுற்றுவட்டப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது முறையான விடயமல்ல.

இனி இவ்வாறான செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுவார்களாயின்  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரின்  பொறுப்பை ஏற்றுகொள்ள வேண்டும். அத்துடன் அரசாங்கம் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. மஹாபொல புலமைப்பரிசு 35 சதவீதத்தில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

நாடுமுழுவதும் 20  பல்கலைக்கழக விடுதிகளை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடுதிகளை 2018 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசு நாட்டின் அபிவிருத்தியின் வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.  இதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் அபிவிருத்தியும் உள்ளடங்கும் என்றார்.

Related posts: