ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவப் பெயர்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை உருவாகவுள்ளது. எனவே நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் ஜூன் 03 ஆம் திகதியிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Related posts:
ஓட்டிசம் நோயாளர்களைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும்
இறக்குமதி வரி குறைப்பு - உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு பாரிய நட்டம்!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை - மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரிப்பு!.
|
|