அரச தொழில் முயற்சிகளில் தகுதியும் ஆற்றலும் உள்ளவர்கள் நியமனம் : நிதியமைச்சர்!

Friday, July 6th, 2018

அரச சார் தொழில் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆற்றல் உள்ளவர்களை பதவிகளில் அமர்த்துமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த முயற்சிகளை சிறப்பாக முன்னெடுத்துச் சென்று வணிக ரீதியில் சிறப்பாக இயங்கக்கூடியவையாக மாற்றும் பொறுப்பு அவற்றின் தலைவர்களைச் சார்ந்தது என்றும் அவர் கூறினார்.
இதற்காக உரிய தகைமைகளும் ஆற்றல்களும் உள்ளவர்களை பதவிகளில் அமர்த்துமாறு கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இதில் 55 அரச நிறுவனங்களைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.
தேவையற்ற செலவுகளைக் குறைத்து நிறுவனங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது அரசாங்கத்தின் கொள்கையாகும். அரசிற்குச் சொந்தமான 55 தொழில் முயற்சிகள் சார்ந்த விற்பனைப் புரள்வு கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ருபாவாக இருந்தது.
ஆனால், இந்த நிறுவனங்களின் முழுமையான ஆற்றலை அடைய முடியவில்லை. சிறப்பான நிர்வாக முறைகளின் குறைபாடுகள். தெளிவான பொறுப்புக் கூறல் பொறிமுறை இல்லாதிருத்தல் கொள்கை சட்டகங்களில் உள்ள நெளிவு சுழிவுகள் போன்றவை இதற்குக் காரணம் என்று நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

Related posts: