ஏப்ரல் மாதம் நட்டஈட்டை வழங்கும் பொறிமுறைக்கான சட்டமூலம்!
Friday, March 23rd, 2018
ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நட்டஈட்டை வழங்கும் பொறிமுறைக்கான சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளில் ஒன்றான இந்த பொறிமுறை குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர்அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருந்தார். மேலும் உட்கட்டுமான வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக மறுசீரமைப்பை ஏற்படுத்திவிட முடியாது என்றும்இ ஒஸ்டின் ஃபெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரையில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை - அமைச்சர் டலஸ் அழ...
தேர்தல் ஒத்திவைப்பால் சுமார் 3000 அரச பணியாளர்களுக்கு வேதனம் இல்லை - தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
தனியார் பல்கலை மருத்துவ மாணவர்களை பயிற்றுவதற்குரிய அரச வைத்தியசாலைகளை கண்டறிய ஜனாதிபதி ரணில் விக்ரமச...
|
|
|


