அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து – ‘லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வைத்திய நிபுணர்கள்!

Sunday, August 15th, 2021

டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் உடனடியாக  ‘லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பான ஆவணங்களை வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர், சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளனர்.

மேலும் டெல்டா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து குறைத்து மதிப்பிட வேண்டாம். நாட்டில் அமுலிலுள்ள கட்டுப்பாடுகளும் போதுமானதாக இல்லை. ஆகவே ‘லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்வதே சிறந்தது என வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது நாட்டை 3 வாரத்திற்கு ழுமுமையாக முடக்க வேண்டும். இல்லாவிடின் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் அரசாங்கம் காலம் தாமதிக்காமல் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: