ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை – அது தொடர்பிலல் அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய குடிவரவு சட்டமூலத்தின் கீழ், ஆட் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்தவொருவருக்கும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் இரண்டு மில்லியன் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மற்றும் இலங்கைக்கு வெளியே ஆட்களை கடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை இந்த சட்டம் பரிந்துரைக்கிறது.
இஸ்ரேல் இராணுவம் செய்த மனிதாபிமானமற்ற செயல் அல்லது பொருள் ஆதாயத்துக்காக, இலங்கையர் அல்லாதவர்களை இலங்கைக்கு கடத்துபவர்கள், சட்ட விரோதமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட எந்தவொருவரையும் தெரிந்தே அடைக்கலம் கொடுத்தல், மறைத்தல் மற்றும் வேலைக்கு அமர்த்துபவர்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடத்தப்படுவோரை தவறாக பயன்படுத்துப வர்களுக்கும் ஐந்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 1.5 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். எவ்வாறாயினும், குழந்தைகள் தொடர்பான குற்றம் இழைக்கப்பட்டிருந்தால், குற்றவாளிகளுக்கு எட்டு முதல் இருபது ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், இரண்டு மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|