ஆசிரியர் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்க முடியாது – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, August 11th, 2021

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்க முடியாது என கல்வி அமைச்சர் ஜி.எல் .பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவு ஏனைய அனைத்து அரச சேவைகளையும் பாதிக்கிறது. இதன் காரணமாக, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தேவை என அமைச்சரவை முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கொவிட் -19 தொற்றுநோயில் மக்கள் முதன்மையாக வாழ வழிவகை இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, சம்பள ஒழுங்கின்மைக்கான தீர்வை வரவு – செலவு திட்டம் மூலம் அமைச்சரவை முன்வைக்கும், இது நாடாளுமன்றத்தில் சுமார் மூன்று மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் ஆராய அமைச்சரவை ஒரு துணைக் குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் துயரங்களைக் கவனித்து அனைத்து மாணவர்களின் கல்வி தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்வதாகவும்ன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: