ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு 215 தமிழர்  தகுதி!

Wednesday, March 22nd, 2017

ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் மூன்றாம் வகுப்பிற்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக 2016 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் 205 தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகள் அடிப்படைத் தகுதிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த 216 பேரும் நேர்முகப் பரீட்சையொன்றிட்குத் தோற்ற வேண்டும். அதிலிருந்தான் தெரிவுப்பட்டியல் தயாரிக்கப்படுமென்று தெரிவிக்கப்படுகின்றது.

இதில் வடமாகாணத்தைச் சேர்ந்த 101பேர் தெரிவாகியுள்ளதுடன் 65 பேர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றதுடன் அவர்களில் 36 தமிழர்களும், 29 முஸ்லிம்களும் ஆவர்.

வடக்கு கிழக்கைத் தவிந்த ஏனைய மாகாணங்களிலிருந்து 36 தமிழ்மொழி பேசுவோர் தெரிவாகியுள்ளதுடன், ஆங்கிலமொழி மூலம் 13 சிறுபான்மையின தமிழ் முஸ்லிம் பரீட்சார்த்திகள் தெரிவாகியுள்ளனர்.

மேலும் இவர்களின் பெயர் மற்றும் விபரம் கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: