இரண்டாம்மொழி அறிவு வைத்தியர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும்!

Thursday, August 4th, 2016

நாட்டிலுள்ள வைத்தியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ்மொழி அறிவு அத்தியாவசியமானதாகும். இதன் அடிப்படையில் அரச வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி  அறிவு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இணங்கண்டு அதனை கட்டாயமாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

2007 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட அரச அதிகாரிகளக்கான மும்மொழி கொள்கை மற்றும் மும்மொழி அறிவின் அவசியம் தொடர்பான சட்டமூலம் நடமுறைக்கு வந்த போதிலும் 2013 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது. இருந்த போதிலும் குறித்த சட்டமூலம் வைத்தியர்களுக்கு அத்தியாவசியமான தேவையாக உள்ளது.

நாட்டில் சகல பகுதிகளிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் பணிபுரியும் சிங்கள வைத்தியர்கள் தமிழ்மொழி மூல அறிவின்மையினால் பல்வேறு இடையுறுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அதனை போன்றே தமிழ் வைத்தியர்களும் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனை நிவர்த்திக்கும் வகையில் தமிழ்மொழியை பயிற்றுவிக்கும் தனியார் நிறுவனம் (NITLAD) வைத்தியர்களுக்கு மொழிப் பயிற்சியினை வழங்கியது.

ஆனால் சுகாதார அமைச்சுக்கும் குறித்த தனியார் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் வளப்பற்றாக்குறை காரணமாக தற்போது இயங்கவில்லை. எனவே சுகாதார அமைச்சின் கண்காணிப்பில் மீண்டும் குறித்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து வசதிகளை வழங்கி, வைத்தியர்களுக்கு மொழிப் பயிற்சியினை வழங்க வேண்டும் என்றார்

Related posts: