சட்டத்தரணிகள் சங்கம் யோசனை – தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இணக்கம்!

Monday, May 9th, 2022

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை திட்டங்களை, ஆராய்ந்து அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுவது குறித்து தாம் பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் 13 முக்கிய யோசனைகளை அதன் நிறைவேற்று சபையில் முன்வைத்து ஏகமனதாக நிறைவேற்றியது.

இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த யோசனைகளை ஆராய்ந்து அரசியலமைப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் தற்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசியலமைப்பில் எவ்வாறு திருத்தங்களை மேற்கொள்வது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதனூடாக ஜனாதிபதியின் பதவியில் ஏற்படுத்த கூடிய மாற்றங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்திய இழுவைப் படகு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நஷ்டஈடுகள் பெ...
சினிமாவை ஒழுங்குபடுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி - தொலைக்காட்சியையும் உள்ளடக்குமாறும் கோரிக்கை!
நிலவும் மிக வரண்ட காலநிலை - தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபு...