மக்களுக்கான பணிகளைச் செய்பவராக டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே நாம் காணுகின்றோம்!

Saturday, January 20th, 2018

நாம் வாக்களிக்கவுள்ள ஒவ்வொரு வாக்குகளும் எமது எதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு அத்திவாரமாக அமையும் என்பது நிச்சயமானது என தம்பனச்சோலை முத்துமாரி அம்மன் கோயில் பூசகர் ஈசன் சர்மா தெரிவித்துள்ளார்.

வவுனியா மகாரம்பைக் குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்தகாலங்களில் நாம் வாக்களித்து வெற்றிபெறச் செய்த தமிழ் அரசியல்வாதிகள் மூடப்பட்டுள்ள கதவுகளுக்குள்ளேயே இருந்துகொண்டு அரசியல் செய்கின்றனர். அவர்கள் செய்வது தங்களுக்கானதும் தங்கள் குடும்பங்களுக்கானதாகவுமே இருக்கின்றது.

இந்த நிலையில் எவ்வாறானதொரு மாறுபட்ட சூழலிலும் எப்போதுமே மக்களுடன் நின்று மக்களுக்கான பணிகளைச் செய்பவராக டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே நாம் காணுகின்றோம்.

யாழ்ப்பாணம் தீவகம் இன்று உட்கட்டுமாணம் உள்ளிட்ட அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றால் அதற்கு காரண கர்த்தா டக்ளஸ் தேவானந்தா என்ற ஒருவர் மட்டுமே.

எனவே நடைபெறவுள்ள தேர்தலில் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து வவுனியா மாவட்டத்திலும் அவர்கள் தமது சேவைகளை முன்னெடுப்பதற்கு மக்களாகிய நாம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் நாம் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது என்பதை மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து அதை வீணைச் சின்னத்திற்கே வழங்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே ஒரு மாற்றத்திற்கான தேர்தலாக இந்த தேர்தல் அமையப்பெற்றுள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்கள் மாற்றத்தை கொண்டுவரவேண்டும்.

அவ்வாறு ஒரு மாற்றத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினூடாகவே கொண்டுவர முடியும் என்று கிறிஸ்தவ மதகுரு கௌசி தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாம் இந்தப் பகுதி மக்களுக்கும் பாகுபாடுகள் அற்றவகையில் சேவை செய்யவே விரும்புகின்றோம். அந்தவகையில் வவுனியா மாவட்ட மக்களும் எமக்கு முழுமையான ஆதரவினை நல்கி எமது கட்சியை வெற்றிபெறச் செய்வார்களேயானால் இந்தப் பகுதியின் அபிவிருத்தியை நிச்சயம் நாம் முன்கொண்டு செல்ல தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நீண்டகாலம் புனரமைப்பு செய்யப்படாதுளள் மகாரம்பைக்குளம் காந்தி வீதியையும் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டு மக்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: