நாட்டின் துண்டுவிழும் தொகை 33ஆயிரம் கோடி ரூபாவினால் அதிகரிப்பு!

Thursday, April 28th, 2016

நடப்பு நிதியாண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகை முப்பத்தி மூவாயிரம் கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த வரவு- செலவுத்திட்ட அறிக்கையில் 49937.6 கோடி ரூபா துண்டுவிழும் தொகையாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலை மாற்றங்களின் காரணமாக அரசாங்கத்தின் எதிர்பார்த்த வருமானத்தில் வீழ்ச்சி, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு , நலத்திட்டங்கள் மற்றும் முன்னைய கடன் நிலுவைகளுக்கான வட்டி வீதத்தில் அதிகரிப்பு என்பன காரணமாக துண்டுவிழும் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கையின் பிரகாரம் தற்போதைய மதிப்பீட்டின்படி துண்டு விழும் தொகை 33012.6 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளது.

நிதிநிலை அறிக்கையின் பிரகாரம் தேசிய உற்பத்தியில் துண்டுவிழும் தொகையின் வீதம் 4.4 வீதமாக இருந்தது. எனினும் தற்போது அது 7.4 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts:


வினைத்திறனற்றவர்களாக இருந்துகொண்டு மோசடி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவருவது நகைப...
அமைச்சர் டக்ளஸின் ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர்களால் கிளிநொச்சியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்டுகிற...
நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களியுங்கள் - வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த ஆதரவு தருமாறு பிரதமர் ...