வைத்தியர் சங்க கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு!

Monday, September 19th, 2016

போதைக்க அடிமையாகிவரும் வடமாகாணத்தை மீட்டெடுத்து எம் உறவுகளை பாதுகாக்க அனைவரும் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம திகதி ஒரு மணிநேர கவனயீர்ப்பில் ஈடுபடுவோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எழுந்து நிற்போம் எனும் ஒரு மணிநேர கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழ் ஆசிரியரி் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அரச ஊழியர்கள் அனைவரையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் உயிர் அழிவுகள் அளவுகடந்து செல்கின்றன. இதற்கான முழுக்காரணம் சட்டம் ஒழுங்கு சீராக பேணப்படாமை, அளவுக்கு அதிகமான போதைப்பாவனை என்பவையே. இவை இரண்டும் கட்டுக்கடங்காமல் செல்வதால் எம்மினத்தின் உயிர் அழிவுகள் பெருகி செல்கின்றன. யுத்தத்தால் அழிவடைந்த எம்மினம் தொடர்ந்தம் அழியும் நிலைமைகளை நாம் வேணடிக்கை பார்க்க முடியாது.

எம் இனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முழு உரிமையும் உள்ள உயிர் காப்பு பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ள வைத்தியர்கள் அஞ்சும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து செல்கின்றது

ஆகையால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கு சென்று காலை 10 மமுதல் முற்பகல் 11 மணி வரை பாடசாலை நுழைவாயிலில் ஒன்று கூடி அமைதியான முறையில் போதை ஒழிப்பு சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்தல், வீதி ஒழுங்கை முறைாக பின்பற்றுதல் போன்ற வாசகங்களுடன் கவனயீர்ப்பில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Untitled-3 copy

Related posts: