ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் பத்து நாட்களுக்குள் பூர்த்தி – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டததை பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திபில் ,இதுதொடர்பாக தெரிவித்திருந்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

நான்கு வாரங்களின் பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசி மருந்தை வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை மற்றும் புலமைப்பரில் பரீட்சை முதலானவற்றை நடத்துவதா இல்லையா அல்லது மீண்டும் ஒத்திவைப்பதா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை நாடு முழுவதுமுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 38 ஆயிரம் முன்பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசியைப் பெறவுள்ளனர்.

சிறுவர்களை பாதுகாப்பாக முன்பள்ளிகளுக்கு அனுப்பும் நோக்கில் அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts: