ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்புடன் மேலும் புதிய 10 பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிப்பு!
Saturday, September 5th, 2020
தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும், இது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


