சமூக சீரழிவுகளிலிருந்து மக்களை வழிப்படுத்த தெளிவான விழிப்புணர்வுகள் அவசியம் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் இரவீந்திரதாசன்!

Monday, July 2nd, 2018

சமூக சீரழிவுகள் உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலைகளிலிருந்து மக்களை வழிப்படுத்த தெளிவான விழிப்புணர்வுகள் அவசியம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் சங்கிலியன் தோப்பு வேல்முருகன் சனசமூக நிலைய நிர்வாகத்தினருடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது இளைஞர்கள் இன்று வழி தவறியவர்களாக சென்றுகொண்டிருக்கின்றார்கள். இதை தடுத்து நிறுத்துவது அவசியமானதாகும். கடந்த காலங்களில் அதாவது எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் இவ்வாறான வாள் வெட்டு சம்பவங்களோ அன்றி போதைப்பொருள் பாவனை அதிகரிப்போ எமது பிரதேசங்களில் இல்லாதிருந்ததுடன்

ஆனால் இன்று நல்லாட்சி என்ற போர்வையில் அரசுக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இவ்வாறான கலாசார சீரழிவுகளை கட்டப்படுத்த முடியாது உள்ளதுடன் எமது இனம் இவ்வாறு அழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் இருந்து மக்களை காப்பாற்ற சமூக அமைப்புக்கள் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அதற்காக நாமும் அவ் அமைப்புகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.

இதன்போது குறித்த சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தமது சங்க கட்டட புனரமைப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்திய அம்பலம் இரவிந்தீரதாசன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பார்வைக்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.

36466990_1827169250655487_5148622733621329920_n

Related posts: