இலங்கை வரலாற்றில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்!

Thursday, February 15th, 2018

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளுக்கு அமைய இலங்கை நிதி மற்றும் பங்கு சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்திற்கு அமைய அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை விலை 156.74 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதனைஇலங்கை ரூபாயுடன் ஒப்பிடுகையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இந்த அளவு அதிகமாகிய முதல் சந்தர்ப்பம் இதுவென கூறப்படுகின்றது.

அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 152 ரூபாய் 97 சதமாக பதிவாகியுள்ளது. இந்த நிலைமையில் இலங்கையில் முதலீடு செய்பவர்களுக்கு பாரியஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார பிரிவு பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: