ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்பு – வாரணாசி விமான சேவை – பிரதமர் மோடி அறிவிப்பு!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்த முக்கிய அவதானம் செலுத்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விசாகப் பூரணைத் தின நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகம் 2 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.இரண்டு நாடுகளின் உறவுக்கும் பௌத்த மதம் முக்கிய விடயமாக அமைந்திருக்கிறது.
வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்படும்.அதேநேரம் இந்தியாவின் வாரணாசி நகரத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதன் ஊடாக பௌத்த மற்றும் இந்து மத யாத்திரிகள், வாரணாசியில் உள்ள புனித தளங்களுக்கு சென்றுவர வாய்ப்பு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Related posts:
|
|