அல்வாய் பகுதியில் மினி சூறாவளி

கரவெட்டி- அல்வாய் பகுதியில் நேற்றையதினம் மாலை வீசிய மினி சூறாவளியினால் 12 தற்காலிக வீடுகள் சேதமாகியுள்ளன. அத்துடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் பல வீடுகள் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் மாலை குறித்த மினி சூறாவளி மழையுடன் வீசிய நிலையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே- 378 அல்வாய் பகுதியில் கடுமையான சேதம் உண்டாகியுள்ளது. சூறாவளி காரணமாக தற்காலிக வீடுகள் 12சேதமடைந்துள்ளதுடன், நிரந்தர வீடுகள் பல பலத்த சேதமடைந்துள்ளன.
மேலும் பெரியமரங்கள் பல முறிந்து விழுந்த நிலையில் குறித்த பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
மேலும் சேதமடைந்த வீடுகளில் வாழ்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ள நிலையில் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது
Related posts:
அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமானது நகரும் – வழிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
சமூக மேம்பாட்டுத் திட்ட வரையறை நீடிப்பு குறித்து இலங்கை இந்தியா இடையே இரு தரப்பு ஒப்பந்தம் !
நாளையதினம் உத்தியோகப்பூர்வ பயணமாக சீனாவிற்கு செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!
|
|