சமூக மேம்பாட்டுத் திட்ட வரையறை நீடிப்பு குறித்து இலங்கை இந்தியா இடையே இரு தரப்பு ஒப்பந்தம் !

Saturday, January 21st, 2023

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உயர் பெறுபேற்றைக் கொண்ட சமூக அபிவிருத்தித் திட்டங்களின் (HICDP- High Impact Community Development Project ) வரையறைகளை நீடிப்பது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவிகார அமைச்சருக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில், இலங்கை தரப்பில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும், இந்திய தரப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழிகாட்டுகிறது.

இந்த ஒப்பந்தம் முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்டது. அதன்படி தனிநபர் வேலைதிட்டத்தின் வரையறை 300 மில்லியன் இலங்கை ரூபாவாக இருந்தது.

எனினும் அது இன்று கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 600 மில்லியன் இலங்கை ரூபாவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே இந்தியா வழங்கிய உதவிகள் மற்றும் சர்வதேச நாணயநிதியத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றிற்காக இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் வழங்கிய 3.9 பில்லியன் கடன் உதவி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவாதங்களுக்காக நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அக்கறையுள்ள நண்பர்கள் இருப்பது இலங்கையின் அதிஸ்டம் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts: