அலுவலக மற்றும் பாடசாலைகளுக்காக நாளைமுதல் புதிய போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளைமமுதல் புதிய தொடருந்து ஒன்றை அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து கண்டி வரையான சொகுசுரக கடுகதி புதிய தொடருந்து சேவை ஒன்று நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளாந்தம் அதிகாலை 5.20 அளவில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

இந்த தொடருந்து காலை 8.14 அளவில் கண்டியை சென்றைடையும். குறித்த தொடருந்து மாலை 4.50 அளவில் கண்டி தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 அளவில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

களனி வெளிதொடருந்து மார்க்கத்தில் புதிய தொடருந்து சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வக தொடருந்து நிலையத்தில் இருந்து காலை 6.20 அளவில் புறப்படும் அலுவலக தொடருந்து காலை 8.12 அளவில் கொழும்பு கோட்டையை வந்தடையும்.

மாலை 4 மணியளவில் கொழும்பில் கோட்டையில் இருந்து புறப்படும் தொடருந்து 5.43 அளவில் வக தொடருந்து நிலையத்தை சென்றடையும்.

இதேவேளை, வாரஇறுதி விசேட தொடருந்து சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: