வடமேற்கு வங்கக்கடலில் எதிர்வரும் 30 ஆம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறல்!
Tuesday, September 26th, 2023
வடமேற்கு வங்கக்கடலில் எதிர்வரும் 30ஆம் திகதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களுக்குள் மேலும் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மின்சார விபத்து : இருவர் படுகாயம் - நல்லூரில் சம்பவம்!
அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது - அரச அச்சகம் அறிவிப...
100 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மெத்தனம் - யாழ்ப்பாணத்தில் சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை!
|
|
|


