இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது!

Sunday, March 13th, 2016

எதிர்வரும் மாதத்தில் அரசாங்கம் இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றசமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாத இறுதி வாரத்தில் அரசாங்கத்தின் வருமானத்தை விருத்தி செய்வது குறித்து ஆராயும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்செய்ய உள்ளனர்.

இந்த ஆய்வுகளின் பின்னர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.இதன் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள இணக்கப்பாடுகளின் அடிப்படையில் இடைக்கால மினி வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளது. இதன் ஊடாக மத்திய வங்கியின் நில ஒதுக்கங்களை வலுப்படுத்திக்கொடுக்க 150 கோடி அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகைக்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான் போன்ற தரப்புக்களிடமிருந்து 1800 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.இந்தக் கடன்களுக்கு மேலதிகமாக அபிவிருத்தித் திட்டங்களுக்காக சீனாவிடமிருந்து கடன் தொகைப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது

Related posts: