அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்!

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று(12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அரச கொள்கைகளுக்கு அமைவாக அனைவருக்கும் உயர்ந்தபட்ச சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த துறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளோரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரச கொள்கைகளுக்கு அமைவாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வாகன உரிமை பெயர் மாற்றம்: சலுகைக் காலம் ஜனவரி.01 வரை நீடிப்பு!
வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்!
ஆகஸ்ட் 12 வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் - தகவல் அறி...
|
|