வீதிகளை சீரமைக்க சுழிபுரம் பிரதேசசபை இரண்டு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு!

Wednesday, December 12th, 2018

வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேசசபையின் 2019ஆம் ஆண்டுக்காண வரவு செலவுத் திட்டத்தில் 25 உறுப்பினர்களுக்கும் தலா எட்டு இலட்சம் ரூபா வீதம் மொத்தமாக  இருண்டு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதி ஒதுக்கீட்டின் மூலம் அராலி தெற்கு உடையார் ஒழுங்கை, மூளாய் தேவாலய வீதி, சுழிபுரம் மேற்கு ஆலமோடை வீதி, சுழிபுரம் மத்தி பச்சந்தை வீதி, சுழிபுரம் கிழக்கு காட்டுப்புலம் காளி அம்மன் வீதி, சழிபுரம் கிழக்கு தபாற்ககந்தோர் பின்வீதி, பொன்னாலை முதலாம் ஒழுங்கை தெற்கு வீதி, பனிப்புலம் காலையடி வீதி, தொல்புரம் மேற்கு பனாவெட்டி வீதி முதலாம் ஒழுங்கை, தொல்புரம் மேற்கு பொக்கன் கலட்டி வீதி, தொல்புரம் மேற்கு அந்தோனியார் வீதி, வட்டு கிழக்கு கலட்டி கலட்டி முதலாம் ஒழுங்கை, கீரிமலை வீதி முதலாம் ஒழுங்கை, வட்டு வடக்கு கலட்டி கிளை ஒழுங்கை, வட்டு கிழக்கு குளிப்பன் நொத்தாரிசு இணைப்பு வீதி, சங்கானை தெற்கு சவேரியார் வீதி, சங்கானை தெற்கு சங்கரத்தை 3ம் ஒழுங்கை, சங்கானை முதலாம் ஒழுங்கை கலைவாணி வீதி, வட்டு தென் மேற்கு கனகரத்தினம் வீதி, அலாலி மேற்கு கடற்கரை வீதி, அராலி வடக்கு மயிலயற்புலம் துணைவி ஒழுங்கை, அலாலி வடக்கு புளியடி ஒழுங்கை, அலாலி வடக்கு யாழ் முதலாம் வீதி செட்டிகுறிச்சி பிள்ளையார் வீதி, ஆகிய வீதிகளே சீரமைக்கப்படவுள்ளன. அதேபோல் 27 இலட்சம் ரூபா செலவில் ஆதனங்களுக்கு இலக்கமிடுதல் உட்ட ஏழு முன்கோகிய அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

2019ம் ஆண்டில் வட்டுக்கோட்டை, சங்கானை, அராலி உப அலுவலங்களும் சீரமைப்புச் செய்து அபிவிருத்திச் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

மக்கள் அதிக ஆர்வம் காட்டி தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமை பாராட்டுதலுக்குரியது - வடமாகாண ஆளுநர் பாராட்...
மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் 10 பேர் உயிரிழப்பு - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்ப...
இனிமேலும் காத்திருக்க கூடாது, பாடசாலைகளை ஆரம்பியுங்கள் – துறைசார் தரப்பினரிடம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கல...