அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் – அடியோடு மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர்!

மிரிஹானவில் அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக சில ஊடகங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள குற்ச்சாட்டுக்களையும் அவர் முற்றாக மறுப்பும் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களில் வெளியாரை அனுமதிக்கும் எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு சபை மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கிய பாதுகாப்புச் செயலாளர், இந்தக் கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபர்கள் கலந்துகொள்ளும் வழிமுறை இல்லை என்பதையும் வலியுறுத்தினார்.
தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அரசதலைவர் மற்றும் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், அரச தலைவரின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், திறைசேரியின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோர் சட்டபூர்வ உறுப்பினர்களாக பங்கேற்கும் அதேசமயம், தேசிய புலனாய்வு பிரதானி, அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் நாயகம், இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் நாயகம், குற்றப்புலனாய்வுத் திணைக்கள பிரதி காவல்துறை மா அதிபர், பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு பணிப்பாளர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி ஆகியோர் நியமன உறுப்பினர்களாக தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களில் பங்கு கொள்கின்றனர் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|