இன்றுமுதல் 70 தொடருந்துகள் சேவையில் – தேவைக்கேற்றவாறு பேருந்து சேவையும் முன்னேடுக்கப்பட்டதாக போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, June 28th, 2021

முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து இன்றுமுதல் 70 தொடருந்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு செல்பவர்களுக்காக, இந்த தொடருந்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டதாக திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சுமார் 35 தொடருந்துகள், காலையும் மாலையும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

இதேநேரம், இன்றையதினம் மாவட்டங்களுக்குள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்காக, தேவைக்கேற்றவாறு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ணஹங்ச கருத்து தெரிவிக்கையில் –

கடந்த வாரத்தை விடவும் அதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், தூரப்பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகள் தொடர்ந்தும் இடம்பெற மாட்டாது என்றும், அதற்கான அனுமதி தங்களுக்கு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தேவைக்கு ஏற்றவாறு மாகாணங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்துகளை இன்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாட்டின் எரிசக்தி தேவைகள் குறித்து இலங்கை - ரஷ்யா கலந்துரையாடல் - இலங்கைக்கான ரஷ்யத் தூதரகம் தெரிவிப...
உரத்தை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் மானியம் தேவையற்றது என விவசாய அமைப்புகள் அறிவிக்குமாயி...
ஜனவரி மாதத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான சம்பளத்துடன் கொடுப்பனவும் சேர்க்கப்படும் – பல்க...