அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் அமுலுக்கு வருகின்றது சட்டம் – இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர!
Friday, August 21st, 2020
அலுவலகங்களுக்கு வரும் அரசாங்க ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பத்திக் அல்லது உள்நாட்டு ஆடையை அணிந்து வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு கிடைத்த அமைச்சு தொடர்பில் ஊடகவியலாளர்கள் நாடாளுமன்றத்தில் வைத்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் பற்றிக் கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பற்றிக் ஆடை அணிந்தே நாடாளுமன்ற்திற்கு வருகைத்தந்திருந்தார்.
இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு ஆடை தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மாநகர சபைத் தொழிலாளர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர் சங்கம் ஆதரவு!
ஜனாதிபதி சீனாவுக்கு பயணம்!
ஐக்கிய அரபு இராச்சியத்தினுள் நுழைய இலங்கை உட்பட சில நாடுகளுக்கு தடை!
|
|
|


