வவுனியா மாவட்டத்தில் கரும்புச் செய்கைக்காக 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்க ஜனாதிபதி அனுமதி !

Tuesday, June 27th, 2023

சீனாவிற்கான கரும்புச் செய்கைக்காக வவுனியா மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்குவதற்கான அனுமதியை நேற்றைய  அமைச்சரவை  கூட்டத்தில் ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தினை தேசிய முதலீட்டுச் சபையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவே அமைச்சரவைக்கு நேரடியாகச் சமர்ப்பித்தார்.

தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சீனவின்  முதலீட்டாளர்களின் ஒரு சீனி உற்பத்தி தொழிற்சாலையான sutech தொழிற்சாலையை  வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நயினாமடுவில் 492  ஏக்கர் அல்லது 200 கெக்டேயர் நிலப்பரப்பில்  அமைக்கவும் அதற்கான சீனி உற்பத்திற்கு தேவையான கரும்புச் செய்கைக்கு 30 ஆயிரம் ஏக்கர் நிலம் முதல்கட்டமாக அந்த தொழிற்சாலைக்கு வழங்கவுமே நேற்றைய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த  தொழிற்சாலையின் கரும்புச் செய்கைக்கு வவுனியா மாவட்டத்தின் சகல பிரதேசங்களில் இருந்தும் நிலம் வழங்கப்படுவதோடு அயல் மாவட்டங்களிலும் உள்ளூர் உற்பத்தியாளர்களிற்கு என்னும் பெயரில் மேலும் 42 ஆயிரம் ஏக்கர் நிலம்  வழங்கவும் அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுமே அதிக நிலங்கள் வழஙகப்படவுள்ளதோடு அயல் மாவட்டமான முல்லைத்தீவிலும் குறிப்பிட்டளவு நிலம் இதற்குள் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: