ஒரே மாதத்தில் இந்திய-சீன தலைவர்கள் மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பு!

Tuesday, November 3rd, 2020

நடப்பு மாதத்தில் சீன ஜனாதிபதி ஷி-ஜின் பிங்கை பிரதமர் நரேந்திர மோடி மூன்று வெவ்வேறு கூட்டங்களில் சந்திக்கவுள்ளார்.
எல்லைப் பிரச்சினையை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் மாநாடு வரும் 10ஆம் திகதியும், பிரிக்ஸ் மாநாடு 17ஆம் திகதியும், ஜி-20 மாநாடு 21 மற்றும் 22ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளது.
இதில் முதல் இரு மாநாடுகளை ரஷ்யாவும், மூன்றாவது மாநாட்டை சவுதி அரேபியாவும் நடத்துகின்றன. இந்த மாநாடுகளில் இந்தியப் பிரதமரும் சீன ஜனாதிபதியும் பங்கேற்கின்றார்கள்.
எனினும், காணொளி தொடர்பாடல் மூலம் நடைபெறும் இந்த மாநாடுகளின் போது இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: