இன்று முன்னிரவு 8 மணிமுதல் மீண்டும் முழுமையாக முடக்கப்படுகின்றது இலங்கை!

Thursday, April 30th, 2020

நாடாளவிய ரீதியில் இன்று முன்னிரவு 8 மணிமுதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் நேற்று இரவு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்தவகையில் இன்று முன்னிரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த திங்களன்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையின் பிரகாரம் நாளை மே 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நாளாந்தம் அதிகாலை 5 மணிமுதல் முன்னிரவு 8 மணிக்கே மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென குறித்த அறிவபித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து பலதரப்புகளிலிருந்தும் கேள்விகள் எழுந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மே தினம் என்பதனாலும், மே தினம் அரச, வர்த்தக விடுமுறை தினம் என்பதாலும்எதிர்வரும் வெள்ளிக்கிழமைமுதல் 4 ஆம் திகதி திங்கட்கிழமைவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதே போன்று கடந்த வாரமும் வாரஇறுதி நாட்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் அபாயமுள்ள வலயமான மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 4 ஆம் திகதிவரை ஊரடங்கச்சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: