அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே நீதி – பரீட்சைகள் ஆணையாளர்!
Friday, January 4th, 2019
நாட்டில் உள்ள அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் நீதியும், நியாயமும் நிறைவேற்றப்படும் வகையில் செயற்படுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் கடமைப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தமது திணைக்களம் சட்டரீதியான பொறுப்பைக் கொண்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.
பெறுபேறு வெளியீடுகளின் போது ஒவ்வொரு விடயதானங்களுக்கும் அமைவாக நாடு முழுவதும் ஆரம்ப நிலைகளை பெற்ற பரீட்சார்திகளின் விபரங்களை வெளியிடுவதானது அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் என கருதுவதாகவும் குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நிறைவுக்கு வந்தது யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டம்: ஜனாதிபதியுடன் நாளை பேச்சு?
இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்கிறது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய த...
அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் - இனந்தெரியாதோர் கைவரிசை!…….
|
|
|


