அரச அலுவலகங்களின் மக்கள் சந்திப்பு தினம் திங்களாக மாற்றம்!
Thursday, September 10th, 2020
அரச அலுவலகங்களின் பொது மக்கள் சந்திப்பு தினத்தை திங்கட்கிழமையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (09) புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பொது மக்கள் சந்திப்பு தினம் புதன்கிழமைகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது திங்கட்கிழமையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக அமைச்சர்கள் தமது அமைச்சக்களில் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் சந்திப்புக்களை முன்னெடுக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பல்கலை மாணவர்களது ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்!
சூழலை அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு அபராதம்!
2025 வரையில் தேசிய அரசாங்கத்தின் பயணம் தொடரும்!
|
|
|


