2025 வரையில் தேசிய அரசாங்கத்தின் பயணம்  தொடரும்!

Wednesday, July 19th, 2017

தேசிய அரசாங்கத்தின் புரிந்துணர்வு உடன்படிக்கை இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைகின்ற போதிலும் தேசிய அரசாங்கதின் பயணம் 2025 வரையில் தொடரும். தேசிய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் குழப்ப மாட்டார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்..

பதவி ஆசையில் மஹிந்த அணியினர் அரசாங்கத்தை குழப்ப முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய அரசாங்கத்தினை கொண்டு செல்வதற்கான பிரதான இரண்டு கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை இந்த ஆண்டி செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் தேசிய அரசாங்கம் பயணிக்கும் என இரண்டு கட்சிகளும் குறிப்பிட்டுள்ள நிலையில் உடன்படிக்கை முடிவடைந்த பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts:

சமகால அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் -ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசப...
கொரோனாவை அடுத்து இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு நோயின் ஆபத்து : இதுவரை 27,986 பேர் பாதிப்பு - சுகாதார...
மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை - எந்தவொரு நாடும் அதற்கான அழுத்தமும் கொடுக்கவில்ல...