அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவு!

Sunday, May 8th, 2016

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதற்கமைய எதிர்வரும் 10 ஆம் திகதி அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக அந்த குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை செம்மைப்படுத்து பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த பணிகள் நிறைவடைந்த பின்னர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட விடயங்களை தங்களின் இணையத்தளத்தின் ஊடாக வெளியிடுவதற்கும் எண்ணியுள்ளதாக சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவிற்கு, நாடளாவிய ரீதியில் சுமார் 5000 யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Related posts: