யாழ்.மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க தகுந்த நடவடிக்கை – சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார !

Friday, July 13th, 2018

யாழ்.மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களின் பின்னர் இன்று (12) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சட்ட ஒழுங்கு அமைச்சர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு பிரதி அமைச்சர் அவர்களும் பொலிஸ் மா அதிபரும் வருகை தந்துள்ளனர். இங்கு வந்து மக்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். யுத்தத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் மக்கள் அபிவிருத்தியும் சமாதானத்துடனும் வாழ்வதைக் காணக்கூயதாக உள்ளது.
விசேடமாக சட்ட ஒழுங்கு அமைச்சின் கீழ் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை வழிப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அபிவிருத்தியின் ஊடாக மக்களுக்கு பொருளாதாரம் உயர்ந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தற்போதுள்ள அரசாங்கமும் சட்ட ஒழுங்கு அமைச்சும் சரியான சேவைகளைச் செய்கின்றார்கள்.
அரச முகாமைத்துவ நிர்வாக அமைச்சும் அனைத்து மக்களுக்கும் அனைத்து சேவைகளையும் வழங்குகின்றோம். பொலிஸ் சேவைக்குள் 1500 சமுர்த்தி உத்தியோதர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் பட்டதாரிகளுக்கான வேலைவாயப்பினையும் வழங்கவுள்ளோம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கிராமங்கள் தோறும் கிராமத்தினை ஊக்குவிக்க வேணும் எனும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளின் பிரகாரம் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளோம். யாழ்ப்பாணத்தில் சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்குப் பொலிஸ் உள்ளிட்ட பல தரப்பினருடனும் கலந்துரையாடி நடவடிக்கைகள் முன்னெடுப்போம்.
இதன்போது யர்ழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கலாசாரங்கள் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா? ஏன ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஆதற்குப் பதிலளித்த அமைச்சர் வாள்வெட்டு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் பொலிஸார்கைதுசெய்துள்ளனர்.இவ்வாறான வாள்வெட்டு மற்றும் சமூக சீர்கேடான செயல்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பான தகவல்களை பொது மக்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். பொது மக்களின் தகவல்களின் பிரகாரமே எமது செயற்பாட்டினை மேலும் முன்னெடுக்க முடியும்.

ஏதாவது சம்பவங்கள் நடைபெறும் போது அந்த சம்பவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளேன். கடந்த காலங்களில் 12 லட்சத்து 5 ஆயிரத்திற்கு அதிகமான கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரகளை கைதுசெயதுவருகின்றனர் என அறிந்துள்ளேன்.

பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனை செய்து நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீண்டும் போதைப்பொருள் விற்பனை செய்து கைதுசெய்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென. அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறான சம்பவங்களின் பின்னர் வடக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாக்க வேண்டுமென தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன என மீண்டும் கேள்வி எழுப்பிய போது செய்தியின் பின்னர் வடக்கிலும் தெற்கிலும் இருந்து எதிராகவும் சார்பாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தது. சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Related posts: