நல்லிணக்கத்தை விரும்பாத தமிழ் கட்சிகள் – அளும் தரப்பின் ஆதரவுடன் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்ட அலுவலகம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Thursday, January 11th, 2024

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது சட்ட மூலத்துக்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 41 மேலதிக வாக்குகளால் இந்த சட்டமூலம் சபையில் நிறைவேற்றப்பட்டது

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தை நேற்று முன்தினம் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச சபையில் சமர்ப்பித்தார்.

இதையடுத்து நடைபெற்ற விவாதத்தின் இறுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வாக்கெடுப்பைக் கோரினார். பின்னர், நடைபெற்ற வாக்கெடுப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி. ஆகியன புறக்கணித்தன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிராக வாக்களித்தன. ஆளும் கட்சியினர் ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷவினால் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

பயங்கரவாத தடை சட்டமானது பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இந்த புதிய சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது.

இதேவேளை தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் இந்த சட்டமூலம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களை ஆய்வு செய்தபின் உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம், தற்போதைய சட்ட கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் அதேவேளை மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னதாக கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சிறுபான்மைக் கட்சிகளும், சர்வதேச மனித உரிமை மற்றும் சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்பை அடுத்து தாமதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: