சுயாதீனமான பனை நிதியத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, July 25th, 2019

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சுயாதீனமான பனை நிதியத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

அத்துடன், இந்த நிதியத்தின் இரண்டு ஆண்டுகளுக்கான செலவினங்களுக்காக, 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பனை நிதியத்தை உருவாக்குவதற்கான சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு, சட்டவரைஞரைக் கோரும், வகையில் அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கும் அமைச்சரவையினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கையில் நல்லிணக்கச் செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கு, 15.25 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வலிகாமம் வடக்கில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியிலுள்ள நான்கு பாடசாலைகளில் புதிய வகுப்பறைக் கட...
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை – பணிப்பாளர்!
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் சீர்த்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பி...