அரிசி விலையை அதி­க­ரிப்பவர்களுக்கு எதிராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை !

Friday, June 2nd, 2017

நெல்­லையும்  அரி­சி­யையும் பதுக்கி வைத்து  அரிசித் தட்­டுப்­பாட்டை வேண்­டு­மென்றே ஏற்­ப­டுத்தி விலையை அதி­க­ரிக்கும் ஆலை­ உ­ரி­மை­யா­ளர்­க­ளுக்கும் வர்த்­த­கர்­க­ளுக்கும் எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என  நுகர்வோர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது.

நெல்­லையும்  அரி­சி­யையும் பதுக்கி வைத்து  அரிசித் தட்­டுப்­பாட்டை வேண்­டு­மென்றே ஏற்­ப­டுத்தி விலையை அதி­க­ரிக்கும் ஆலை­ உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் வர்த்­த­கர்­க­ளுக்கும் எதி­ராக  நட­வ­டிக்­கை­களை எடுப்­பது குறித்து வாழ்க்கைச் செலவு உப­கு­ழுவில் தீவி­ர­மாக ஆரா­யப்­பட்­டது.

இக்­கு­ழுவின் முடி­வுக்­க­மைய அரிசி ஆலை உரி­மை­யா­ளர்கள்  இறக்­கு­ம­தி­யா­ளர்கள் மற்றும் உள்ளூர் வர்த்­த­கர்கள் ஆகி­யோர்­களின் விப­ரங்கள் தொடர்­பான அறிக்­கை­யொன்றை அவசர­மாக பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மென நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்­புரை விடுத்­துள்ளார். அத்­துடன் அரி­சியை இறக்­கு­மதி செய்­ப­வர்­களின் விப­ரங்கள்  அவர்கள் இறக்­கு­மதி செய்யும் அரி­சியின் கொள்­ள­ளவு மற்றும் இறக்­கு­மதி செய்யும் அரி­சியை விநி­யோ­கிக்கும் பிர­மாணம் தொடர்­பி­லான பிறி­தொரு அறிக்­கை­யையும் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மென அமைச்சர் ரிஷாட் அதி­கா­ர­ச­பைக்கு அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

அதே போன்று உள்ளூர் ஆலை­உ­ரி­மை­யா­ளர்­க­ளிடம் இருக்கும் நெல்லின் கொள்­ள­ளவு  அரிசிக் கொள்­ள­ளவு மற்றும் அரி­சியை விநி­யோ­கிக்கும் நடை­முறை தொடர்­பி­லான மேலும் ஒரு அறிக்­கை­யையும் கோரு­மாறு அவர் பணித்­துள்ளார்.

இது தொடர்பில் நுகர்வோர் பாது­காப்பு அதி­கா­ர­ச­பையின் தலைவர் ஹஸித தில­க­ரத்ன தெரி­விக்­கையில்இ 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் அரிசி இறக்­கு­ம­தி­யா­ளர்­களின் விப­ரங்­களும் அரி­சியைப் பங்­கீடு செய்யும் நடை­மு­றையும் கோரப்­பட்­டுள்­ளன.  இவ்­வ­ருடம் மார்ச் மாதம் வரை அரி­சியின் விலையை கட்­டுப்­பாட்டு விலை­யிலும் பார்க்க அதி­க­ரித்து விற்­பனை செய்த  2000 வியா­பார நிலை­யங்கள் மீது நுகர்வோர் பாது­காப்பு அதி­கா­ர­சபை வழக்குத் தொடர்ந்­துள்­ளது. அத்­துடன் இறக்­கு­மதி செய்­யப்­படும் அரி­சியை உள்ளூர் அரி­சி­யுடன் கலந்து ஏமாற்றி வியா­பாரம் செய்து வரும் வர்த்­த­கர்­க­ளுக்­கெ­தி­ராக நுகர்வோர் பாது­காப்பு அதி­கா­ர­சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது என்றார்.

Related posts:

இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயார் - இலங்கைக்கான பதில் சீன தூத...
சுவிஸ் தூதரக ஊழியர் மீதான குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அனுமதி!
நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன வ...