தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 509 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!
Tuesday, September 21st, 2021
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய மேலும் 509 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதியில் 25 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையான காலத்திற்குள் 76 ஆயிரத்து 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கலாம்?
ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வடமாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கு அமைச்சர் நளின் பெ...
|
|
|


