ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கலாம்?

Friday, March 27th, 2020

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள மார்ச் ஊரடங்கு சட்டம் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டு மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு சட்டம், ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.

இதுதொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில், கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஆராயப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஏப்ரல் 6 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.

அதன் பின்னர், 7 மற்றும் 8 ஆம் திகதிகளை தவிர்த்து, ஏப்ரல் 15 ஆம் திகதி வரையிலும் விடுமுறை என்பதனால், அரசாங்கம் இவ்வாறு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts: