அரசாங்கத்தை எவராலும் விழ்த்திவிட முடியாது – அமைச்சர் ராஜித!

அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக வெளியிடப்படும் கருத்துக்கள் கனவு மாத்திரமே. நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மத்துகம கடுகஹஹேன பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் தூர நோக்கு கொண்டு செயற்பட்டு வருகின்றனர். சில அரசியல்வாதிகள் பழைய நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டாலும், சிரேஷ்ட அமைச்சர்கள் அரசாங்கத்தை பாதுகாக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கை!
இஸ்லாமிய பயங்கரவாதிகளே தற்கொலை தாக்குதல் மேற்கொண்டனர் - அரசாங்கம் அறிவிப்பு!
நாட்டில் மீண்டும் புத்துயிர் பெறும் சுற்றுலாத்துறை – இவ்வருடம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமா...
|
|