இன்று இந்திய பிரதமர் இலங்கை விஜயம்!

Thursday, May 11th, 2017

இந்திப் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று மாலை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இலங்கை வரும் அவர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாகப் பண்டிகை நிகழ்வில் பங்கேற்கவுள்ளார் இந்த நிலையில், பாரதப் பிரதமர் மோடியின் மலையக பயணம் தொடர்பில் மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தித்துறை அமைச்சர் பழனி திகாம்பரம் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, கண்டியில் இந்திய பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மேற்கொள்கிறார். டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வூர் மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தமது தலைமையின்கீழ் இயங்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள், அபிவிருத்தித்துறை அமைச்சு பொறுப்பேற்று மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட அரச தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்இவ்வாறு இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை பிற்பகல் இந்தியாவுக்கு புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளாந்தம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவண்ணம் பல போராட்டங்களை மேற்கொண்டுவரும் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மோடி வருகைதந்து அவை தொடர்பில் அவதானம் செலுத்தவார் என எதிர்பார்த்திருந்த அம்மாவட்டங்களை சேர்ந்த தமிழ் மக்களுக்கு பாரத பிரதமர் மோடி அப்பகுதிகளுக்கு செல்லாமை பெரும் ஏமாற்றத்தை கொடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தனியார் பேருந்துகளை நடத்துநர்களின்றி இயக்க யோசனை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிப்பு - இலங்க...
ஈஸ்டரை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடக் கூடியவாறு நமது அரசாங்கமே செய்துள்ளது - ஈஸ்டர் செய்தியில் அரச...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!