அய்யூப் அஸ்மினிற்கு எதிராக யாழில் போராட்டம்!
 Saturday, August 27th, 2016
        
                    Saturday, August 27th, 2016
            
வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 7 வருடங்களாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில் யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.
முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் யாழ்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் இன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான விஷேட திட்டமிடல் அமர்விற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் செயற்பாடு பக்கச்சார்பானது எனவும் அவர் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தை அரசியல் சாயம் பூச முயற்சிப்பதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்குற்றம் சுமத்தினர்.


Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        