சூறாவளியால் பருத்தித்துறை கடற்பரப்பில் 40இற்கு மேற்பட்ட படகுகள் அடித்துச்செல்லப்பட்டன!

Monday, May 16th, 2016

பருத்தித்துறை முனை கடற்பரப்பில் தொழிலுக்காக விரிக்கப்பட்டிருந்த 40 கடல் தொழிலாளர்களது படகுகளும், வலைகளும்  நேற்றிரவு வீசிய சூறாவளி காரணமாக கடலலையுடன் அடித்துச் செல்லப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் தொழிலுக்காக செல்லும் மீனவர்கள் தமது வலைகளை கடலில் விரித்துவிட்டு மறுநாள் காலையில் அவற்றை சேகரித்து தொழிலிலீடுபடுவது வழமை. நேற்றைய தினமும் தமது தொழிலுக்கான வலைகளை கடலில் விரித்துவிட்டு படகுளையும் கரையில் கட்டிவிட்டு சென்றுள்ளனர்.

நேற்றிரவு வீசிய சூறாவளி காற்றினால் குறித்த பகுதி மீனவர்களது வலைகள் கடலலையுடன் அள்ளுண்டு போனதுடன் கரையில் கட்டப்பட்டிருந்த 40இற்கு மேற்பட்ட படகுகளும் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடும்மழை மற்றும் காற்றினால் தமது வள்ளங்கள், வலைகள் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் அவற்றை தேடும் பணிகளில் ஈடுபடமுடியாத நிலையில் தாம் இருப்பதாக குறித்த தொழிலாளர்கள் கவலையுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2

3

Related posts: