அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீள பெறப்பட்டது!
Monday, September 18th, 2023
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீள பெறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணையை முடிவுறுத்துமாறு சட்டமா அதிபர் காவல்துறையினருக்கு அண்மையில் பணிப்புரை விடுத்தார்.
இந்தநிலையில், குறித்த மனுவை மீள பெற தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்.பல்கலைகழகத்திற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரி நியமனம்!
பாவனையாளர் நீர் கட்டணம் ரூ. 7,500 மில்லியன் நிலுவையில் ஜனாதிபதி முன்பாக சபையின் தலைவர் தகவல்!
வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளர் சுந்தரம் திவகலாலா காலமானார்!
|
|
|


