நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறையை மீண்டும் வலுப்படுத்த கடன்திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, February 28th, 2024

நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறையை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன்திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்பொது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார பின்னடைவின் விளைவுகளாலும் மற்றும் அதன் கட்டுப்பாட்டுக்கு அப்பாலான வெளிப்புறக் காரணிகளின் விளைவுகளாலும் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில்துறை மற்றும் இதர வணிகத் தொழிற்பாடுகள் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினருக்கு தமது தொழில் முயற்சிகளை மேற்கொண்டு செல்வதற்குப் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் அதற்கான சலுகையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறைக்கு தொழிற்பாட்டு மூலதனம் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

அத்துடன் உத்தேச வேலைத்திட்டத்தின் மூலம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு தத்தமது வியாபாரங்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் தேவையான கடன் வசதிகளை அனுமதிபெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதிபெற்ற விசேட வங்கிகள் மூலம் சலுகை வட்டி வீதத்தில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு கூறுகளாக குறித்த வேலைத்திட்டத்திற்கு 20 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளதுடன், அதில் 15 பில்லியன் ரூபாய்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மற்றும் புதிய தொழில் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும், எஞ்சிய 5 பில்லியன் ரூபாய்கள் செயலற்ற கடன் பிரிவின் கீழ் காணப்படுகின்ற தொழில்முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் ஒதுக்கப்படவுள்ளது.

உத்தேச வேலைத்திட்டத்தின் மூலம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு தத்தமது வியாபாரங்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் தேவையான கடன் வசதிகளை அனுமதிபெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதிபெற்ற விசேட வங்கிகள் மூலம் சலுகை வட்டி வீதத்தில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு கூறுகளாக குறித்த வேலைத்திட்டத்திற்கு 20 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளதுடன், அதில் 15 பில்லியன் ரூபாய்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மற்றும் புதிய தொழில் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும், எஞ்சிய 5 பில்லியன் ரூபாய்கள் செயலற்ற கடன் பிரிவின் கீழ் காணப்படுகின்ற தொழில்முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் ஒதுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: