அமைச்சர் பந்துல குணவர்தன துபாய் பயணம் – இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்துறை பேச்சுக்களுக்கும் ஏற்பாடு!
Wednesday, February 16th, 2022
இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (16) காலை துபாய் நோக்கி பயணமாகியுள்ளார்.
அமைச்சரின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல் – செயுதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பை தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்கள் தொடர்பான மூன்று நாள் வர்த்தக கண்காட்சி நாளை (17) திறந்து வைக்கப்படுமென வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் மரக்கறி வகைகளின் விலை திடீரென அதிகரிப்பு!
அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர்...
தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் கண்டறியப்பட்டால் கைதுசெய்யப்படுவர் !
|
|
|


